கேரளாவில் முதல் மாடியில் உள்ள வங்கியில் பணம் செலுத்த சென்ற நபருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு தீடிர் விபத்திலிருந்து காப்பாற்றிய நபரை மக்கள் பாராட்டியுள்ளனர் .
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வடகரை பகுதியில் ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் மாவட்ட கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் சனிக்கிழமையன்று வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் வந்த வண்ண இருந்தனர். அப்போது அங்கே பினு என்ற கூலித் தொழிலாளி தனது வருங்கால வைப்புத்தொகையை செலுத்த அங்கு வந்திருந்தார் அப்பொழுது உயரம் குறைவான தடுப்பு சுவரின் கைகளைக் கட்டியவாறு சாய்ந்துகொண்டு நின்றிருந்தார்.
அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு மயக்கம் வந்தபொழுது முதல் மாடியிலிருந்து சரிந்து கீழே விழும் போது எதிர்பாராதவிதமாக அங்கிரந்த பாபுராஜ் என்பவர் விரைந்து செயல்பட்டு அவரின் கால்களை அழுத்திப் பிடித்துக் கொண்டார். அதன்பிறகு சத்தம்போட்டு அங்கிருந்த வாடிக்கையாளர்களையும் ஊழியர்களையும் அழைத்து அவர்களின் உதவியுடன் பாபுராஜ் பினுவை மெதுவாக மேலே தூக்கிஉள்ளனர்.
பினுவிற்கு அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.முதல் மாடி என்பதால் ஏராளமான மின்கம்பிகள் இருந்த நிலையில் பினுவை கீழே விழாமல் கனகச்சிதமாக காப்பாற்றிய பாபுராஜ்யை அனைவரும் பாராட்டினார் . இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி வீடியோ சமூக வலைதளங்களில் பெருமளவில் பரவி வருகிறது. இதனால் பாபுராஜ்விற்கு மக்களிடத்திலிருந்து பெருமளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.