காணாமல் போன சிறுவர்களை 1 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினரை கமிஷனர் பாராட்டியுள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள நடராஜர் நகர் பகுதியில் மணிகண்டன் மகன் நந்தன் மற்றும் நக்கீரன் மகன் முகிலன் ஆகிய 2 சிறுவர்களும் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நந்தன், முகிலன் ஆகிய இரண்டு சிறுவர்களும் காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுவர்கள் கன்னங்குறிச்சி பகுதியில் இருந்து வழிதவறி மாமாங்கத்துக்கு நடந்து சென்றது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த 2 சிறுவர்களையும் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு புகார் கொடுக்கப்பட்ட 1 மணி நேரத்தில் 2 சிறுவர்களை மீட்ட காவல்துறையினரை கமிஷனர் நஜ்முல் ஹோடா பாராட்டினார்.