Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த மாணவி…. வெளியிட்ட உருக்கமான வீடியோ…. முதல்வரின் உதவி….!!

இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்த மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கு முதல்வர் முக.ஸ்டாலின் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்திலுள்ள அரிசிபாளையம் பகுதியில் விஜயகுமார்-ராஜ நந்தினி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் ஜனனி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் இவர் சிலம்பம், ஸ்கேட்டிங், வில்வித்தை போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு மாநில அளவில் பரிசுகளைப் பெற்றுள்ளார். கடந்த  2019-ஆம் ஆண்டு மாணவி வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவிக்கு 2 சிறுநீரகமும் செயல் இழந்து போவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் உறவினர் மாணவி ஜனனிக்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு ஜனனி மற்றும் அவரது தாய் இருவரும் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து உருக்கமாகப் பேசிய வீடியோவை  வெளியிட்டனர். அந்த வீடியோ முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து உதவி கேட்ட மாணவியின் தாயிடம் முதல்வர் செல்போனில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது “மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு சுகாதாரத் துறையினரிடம் பேசி நடவடிக்கை எடுத்திருப்பதாக” முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு சிறுமியின் தாயார் “எனக்கு காசு பணம் எதுவும் வேண்டாம், தன் குழந்தையை காப்பாற்றினால் போதும் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து எனது மகள் உங்களிடம் பேசுவதற்கு ஆர்வத்துடன் இருக்கிறார்” என்று முதல்வரிடம் அவர் தெரிவித்துள்ளார் .அதன்பின் முக.ஸ்டாலின் மாணவியிடம் உனக்கு எல்லாம் சரியாகிவிடும். ஆகவே நீ பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |