Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென்று மோதிய லாரி ….. ஓட்டுனருக்கு நேர்ந்த சோகம் …. கைது செய்த போலீஸ் ….!!!

மயிலாடுதுறை அருகே நின்றுகொண்டிருந்த  லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் குறுக்கு தெருவை சேர்ந்த மும்மூர்த்தி என்பவர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார் .இவருக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அரக்கோணத்திலிருந்து லாரியில் ஜல்லியை  ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவிழுந்தூர் என்ற இடத்தில் ரோடு  அருகே லாரியை நிறுத்தியுள்ளார்.

அப்போது காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பழனி என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதவிதமாக நின்றுகொண்டிருந்த இவருடைய லாரியின்  மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் மும்மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த செம்பனார்கோவில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த ஓட்டுனரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஓட்டுநர் பழனி கைது செய்துள்ளனர்.

Categories

Tech |