வெயில் சுட்டெரித்த நிலையில் திடீர் கனமழை காரணத்தினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரத்தில் வெயில் சுட்டெரித்த காரணத்தினால் கையில் குடை பிடித்துக்கொண்டும் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலையில் தொப்பி அணிந்து கொண்டு சென்றதை காணமுடிகிறது. இதில் வெப்பத்தினால் புழுக்கம் ஏற்பட்டு உடலில் வியர்வை வடிந்த காரணத்தினால் பொதுமக்கள் மோர், இளநீர், கரும்புச்சாறு, குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை அதிக அளவில் வாங்கி குடித்துள்ளனர்.
இந்நிலையில் மதியம் 12 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டிருக்கிறது. அதன்பின் அடுத்த சில நிமிடங்களிலேயே இடி-மின்னலுடன் பலத்த கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் தெருக்கள் மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றுள்ளது. இதனையடுத்து பெய்த கனமழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.