போலீஸ்காரர் 8 வருடங்களாக வளர்த்த நாய் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் மனம் உடைந்து அதனை போலவே மெழுகு சிலை அமைத்து பராமரித்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மதுவிலக்கு பிரிவில் ரேணுகாந்த் என்பவர் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர், பிறந்து 40 நாட்கள் ஆன ஜெர்மன் ஷெப்பர்டு என்ற நாய் குட்டியை கடந்த 2012 ஆம் ஆண்டு கொடைக்கானலில் இருந்து வாங்கி இருக்கிறார். அதன்பின் அந்த நாய்க்குட்டிக்கு பவுலி என்னும் பெயரை வைத்து 8 வருடங்களாக தன் வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.
தற்பொழுது கடந்த ஒரு மாதத்திற்கு முன் பவுலி உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டது. பவுலி இறந்ததால் ரேணுகாந்த் மற்றும் அவரின் குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் இருந்தனர். தன் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் பவுலியை அடக்கம் செய்துவிட்டனர்.
பவுலி நாய் மேல் அதிக பாசம் கொண்டு அதன் நினைவால் வாடியிருந்த குடும்பத்தினருக்கும் அவருக்கும் அதன் நினைவாக தோட்டத்திலேயே அந்த நாயைப் போல் மெழுகு சிலை ஒன்றை அமைத்து அதனை போலீஸ்காரர் ரேணுகாந்த் பராமரித்து வருகிறார்.