அமெரிக்காவில் 76 வயதான பெண்மணி ஒருவர் தன்னைத் தாக்கிய மர்ம நபரை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் அவர்களுக்கு எதிரான போராட்டங்களும் அவ்வபோது நடந்து வருகிறது. அதன்படிகடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களை அமெரிக்கா குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியது . இதனையடுத்து அமெரிக்காவில் ஜான் பிரான்சிஸ்கோவில் என்ற பகுதியில் ஆசிய பெண்மணி(76) ஒருவர் வசித்து வருகிறார். அவர் தெருவில் நடந்த சென்றபோது மர்ம நபர் ஒருவர்(39) அந்தப் பெண்ணின் முகத்தில் குத்தி உள்ளார். உடனே அவரின் கண்கள் வீங்கி விட்டது.
அதன்பிறகு அந்தப் பெண் அந்த மர்ம நபரை திருப்பி தாக்கி உள்ளார். அதனால் அவரின் வாயில் இருந்து ரத்தம் வடிந்தது. அதைனை பார்த்து மக்கள் உடனே இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .மேலும் அந்த வீடியோவில் அந்த நபர் ஸ்ட்ரெச்சரிலும் அந்தப் பெண் கையில் குச்சியுடன் வீங்கிய கண்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதை காணமுடிகிறது .
A 75-year-old Asian woman in San Francisco said she was suddenly punched by a man while leaning on a telephone pole but fought off the attacker on Wed. According to KPIX report, she counterattacked with a stick and the attacker was later carried away on a stretcher. pic.twitter.com/TbmNorbOol
— Global Times (@globaltimesnews) March 18, 2021