Categories
தேசிய செய்திகள்

திடீரென 35 கிலோமீட்டர் பின் நோக்கிச் சென்ற ரயில்… அச்சத்தில் உறைந்த பயணிகள்… பதறவைக்கும் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று ரயில் ஒன்று 35 கிலோ மீட்டர் வரை பின்னோக்கி சென்ற சம்பவம் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.

உத்தரகாண்டில் புர்னகிரி சதாப்திலிருந்து விரைவு ரயில் ஒன்று புறபட்ட நிலையில் தண்டவாளத்தில் மாடுகள் நின்று கொண்டிருந்ததால் மாடுகள் மீது மோதி விட கூடாது என்ற நோக்கத்துடன்  ரயில் ஓட்டுநர் வேகமாக பிரேக் பிடித்த நிலையிலும் ஒரு மாட்டின் மீது ரயில் மோதியுள்ளது. ஆகையால் ரயில் தனது கட்டுப்பாட்டை இழந்து காத்திமா ரயில்நிலையம் வரை அதாவது சுமார் 35 கிலோமீட்டர் தூரம்  பின்னோக்கி சென்றுள்ளது.

இந்நிலையில் ரயிலில் உள்ள பயணிகள் சீட் நுனியில் அமர்ந்தபடி மிகுந்த அச்சத்தில் தவித்துள்ளனர். ஆனால் பயணிகளின்  அதிர்ஷ்டவசத்துடன்  ரயிலின் தடம் புரளாமல் இருந்ததால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் ஆபத்தின்றி உயிர் பிழைத்து உள்ளனர். பயணிகளில் சிலர் பேருந்தின் மூலம் தன்காபூர் அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் சில பயணிகள் மாற்று ரயிலில் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டு இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெருமளவில் பரவி வருகிறது.

Categories

Tech |