பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் இடையில் திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர் திடீரென முற்றுகையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து அவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்யக்கோரி ஏரியூர்-பொன்னாகரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி தலைமையாசிரியர் மற்றும் காவல்துறையினர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அந்தப் பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்தபின் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்