மின்டோரா மாகாணத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைந்துள்ள மின்டோரா மாகாணத்தில் இன்று நள்ளிரவு 1.12 மணி அளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகி உள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் 34 கி.மீ தொலைவிலும் 74 கி.மீ ஆழத்திலும் மையமாக கொண்டுள்ளது. இந்த தகவலை புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை.