மூடுபனி அதிக அளவில் இருக்கிறதால் பொதுமக்கள் பலரும் வெளியே வருவதை தவிர்த்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வழக்கத்திற்கு மாறாக மூடுபனி பெய்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை தெரிந்து கொள்வதற்காக முகப்பு விளக்குகளை எரிய விட்டு மெதுவாக சென்றுள்ளனர்.
இதனையடுத்து மூடுபனியின் காரணமாக பொதுமக்கள் பலரும் வெளியே வருவதை தவிர்த்துள்ளனர். பின்னர் சூரியன் உதிக்க தொடங்கிய நிலையில் மூடுபனி விலகி உள்ளது. மேலும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வழக்கம் போல் தங்களது பணிகளை செய்துள்ளனர்.