உறங்கச் சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் பகுதியில் சித்திரவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 22 வயதுடைய கனகலட்சுமி என்ற மகள் இருக்கின்றார். இவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சித்திரவேல் தனது குடும்பத்துடன் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார்.
இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்தபோது தனது மகளின் அறை கதவு திறந்து இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு கனகலட்சுமி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் சித்திரவேல் தனது உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கனகலட்சுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து சித்திரவேல் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிந்த காவல்துறையினர் மாயமான இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.