மின்கம்பம் அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் வெங்கடேசன் என்பவர் கட்டிட தொழிலாளியாக வசித்து வருகின்றார். இவருக்கு சாரதாம்பாள் என்ற தாய் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது பேரப்பிள்ளைகளுடன் வீட்டின் வெளியே இருந்தபோது திடீரென வீட்டிற்கும் மேலே செல்லும் மின்சார வயர் தீப்பற்றி எரிந்தது.
இதனால் சாரதாம்பாள் தனது பேரப்பிள்ளைகளை வீட்டிற்குள் போகும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்குள் மின்சார கம்பி அறுந்து சாரதாம்பாள் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே தீப்பற்றி எரிந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.