மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி விழுந்த காண்ட்ராக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழபெருவிளை முத்தாரம்மன் கோவில் தெருவில் காண்ட்ராக்டர் ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பார்வதிபுரம் பாலத்தின் கீழ் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ஜார்ஜை அருகில் இருப்பவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து ஜார்ஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் ஜார்ஜின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.