டி.வி பழுதுபார்க்கும் கடையில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாமால் பகுதியில் நாராயணன் என்பவர் டி.வி பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நாராயணன் கடையை பூட்டிவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து நாராயணன் சென்ற சிறிது நேரத்திலேயே அவரின் கடையில் திடீரென தீப்பிடித்து மளமளவென்று எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனால் அருகிலிருந்த கடைகளுக்கு தீயானது பாராமல் தடுக்கப்பட்டதோடு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடையில் உரிமையாளரான நாராயணன் கடைக்குள் சென்று பார்த்தபோது 25 லட்ச ரூபாய்க்கான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீப்பற்றி எரிந்த கடையை சோதனை செய்த போது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது . மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.