ஓடும் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகின்ற ஊழியர்கள் 7 பேர் திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தொழிற்சாலைக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தொழிற்சாலை அருகாமையில் வந்த போது திடீரென வேனிலிருந்து புகை வந்ததால் ஓட்டுநர் நிறுத்தி உள்ளே இருந்த ஊழியர்களை கீழே இறக்கி விட்டு புகை வெளியேறுவதை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது திடீரென வேன் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். இருப்பினும் வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது. இதனை அடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து புகை வெளியேறுவதை பார்த்த ஓட்டுநர் வேனை நிறுத்தியதால் 7 பேரும் உயிர் தப்பியுள்ளனர்.