7-வது டி20 உலக கோப்பை போட்டி கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர்- கேப்டன் ஆரோன் பின்ச் ஜோடி களமிறங்கினர் .இதில் முதல் ஓவரில் 3 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றி அசத்தினார் .இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 7-வது ஓவரில் பவுலிங் செய்தார் .இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
இதில் விராட் கோலி வீசிய முதல் 2 பந்துகளில் ரன் எதுவும் எடுக்கவில்லை .அடுத்த 4 பந்துகளில் ஸ்மித் 2 ரன்னும் ,மேக்ஸ்வெல் 2 ரன்னும் எடுத்தனர் .அந்த ஓவரில் விராட் கோலி 4 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்தார். மேலும் 13-வது ஓவரை வீசிய விராட் கோலி ஒரு பவுண்டரி உட்பட 8 ரன்கள் விட்டுக் கொடுத்தார் .திடீரென கேப்டன் விராட் கோலி பந்து வீசியது இந்திய ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்திய அணியில் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா உடற்தகுதி பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை .இதனால் ஒருவேளை அவர் பந்துவீச்சு வில்லை என்றால் ,6-வதாக இந்திய அணிக்கு பந்து வீச கூடிய ஒரு ஆல்ரவுண்டர் தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது
இதனை சரி செய்வதற்காகவே நேற்றைய போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓவரை கொடுத்து பரிசோதித்து உள்ளார் ரோகித் சர்மா. இதனிடையே டாஸ் போடும்போது பேசிய ரோகித் சர்மா, அணியில் ஹர்திக் பாண்டியா இன்னும் பந்துவீச தயாராகவில்லை இதனால் அவர் லீக் போட்டிக்குள் தயாராகி விடுவார் என நினைக்கிறேன். மேலும் இந்திய அணி ஐந்து தரமான பவுலர்களை தான் வைத்திருக்கும் .ஆனால் 6-வதாக ஒரு பவுலர் அணியில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக ரோகித் சர்மா ,சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரில் யாரேனும் பந்து வீசுவோம் என்று கூறியிருந்தார் .அதற்கு ஏற்றவாறு நேற்றைய போட்டியில் விராட் கோலி பந்துவீசினார்.
Captain @imVkohli on Duty 🔥😎 pic.twitter.com/6KxHm08HBQ
— Virat Kohli Trends™ (@TrendVirat) October 20, 2021