மழை பெய்த காரணத்தினால் வாக்குச்சாவடியின் மேலே இருக்கும் கூரைக்கு தார்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதனூர்பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு நடந்த சில வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள் சரியில்லாத காரணத்தினால் வாக்காளர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் பாப்பனப்பள்ளி கிராமத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென பலத்த கனமழை பெய்ய தொடங்கியது.
இதனால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றுக்கொண்டிருந்த வாக்குப்பதிவின் போது மேற்கூரை சேதமடைந்த இருந்த காரணத்தினால் மழைநீர் வாக்குச் சாவடிக்குள் ஒழுகத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக கூரையின் மீது தார்பாய் போட்டு மூட அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு வாக்குசாவடியில் தார்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. மேலும் இதனைப் போன்று பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் வாக்காளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.