தனியார் பேருந்து மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் உள்ள சுனாமி நகர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் அரவிந்த் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று அரவிந்த் மயிலாடுதுறையை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தர்மகுளம் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது பூம்புகாரில் இருந்து சீர்காழி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென்று இவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அரவிந்தை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் போலீசார் ஆகியோர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.