Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீர்னு இடிந்து விழுந்துட்டு… தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்… தென்காசியில் பரபரப்பு…!!

அரிசி ஆலையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானூர் பகுதியில் ரத்தினசாமி என்ற கூலித் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். லட்சுமி பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் ரத்தினசாமி மற்றும் அப்பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரும் இணைந்து அப்பகுதியிலுள்ள அரிசி ஆலையிக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அந்த அரிசி ஆலையில் உள்ள பழைய கூரை ஓடுகளை அப்புறப்படுத்திவிட்டு அதற்குப்பதிலாக ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை பொருத்தும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஆலையில் உள்ள சுவர் இடிந்து ரத்தினசாமி மற்றும் சரவணனின் மீது விழுந்துள்ளது.

இந்த விபத்தில் ரத்தினசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் சரவணன் இடிந்து விழுந்த சுவரின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்த சரவணனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தினசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |