நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் அய்யனார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பாலகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெற்கதிர்களை அறுவடை செய்யும் எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள வயலில் நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் இருந்து மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் பாலகிருஷ்ணை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள்பாலகிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.