Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஆட்டோ திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ காணாமல் போனதை பார்த்து ஜாகிர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆனைமலை காவல் நிலையத்தில் ஜாகிர் உசேன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து அங்கலக்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் மீனாட்சிபுரம் பகுதியில் வசிக்கும் சதாம் உசேன் என்பதும், ஜாகிர் உசேனின் ஆட்டோவை திருடியது இவர்தான் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சதாம் உசேனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Categories

Tech |