ஜவுளிக்கடையில் திருடிவிட்டு தப்பி ஓட முயன்ற மர்ம நபர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் ஜவுளி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையின் பூட்டை உடைத்து 2 மர்ம நபர்கள் உள்ளே சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த துணிகளை திருடிக் கொண்டு வெளியே சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினரை பார்த்ததும் இரண்டு பேரும் தப்பித்து செல்ல முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் காவல்துறையினர் ஒருவரை மட்டும் விரட்டி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வல்லரசு என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தப்பி ஓடிய மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.