Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாறுவேடத்தில் கண்காணிப்பு…. பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பேருந்தில் பணம் திருட முயற்சித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகில் தனிப்படை காவல்துறையினர் மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பேருந்தில் நின்று கொண்டு பயணித்த ஒரு இளம் பெண்ணிடம் இருந்து மற்றொரு பெண் பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அந்த இளம்பெண் சத்தம் போட்டுள்ளார். அப்போது திருட முயற்சித்த பெண் தப்பி செல்ல முயன்றுள்ளார்.

இதனையடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தனிப்படை காவல்துறையினர் திருட முயற்சித்த பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் வசிக்கும் முத்துமாரி என்பது தெரியவந்துள்ளது. இவர் கூட்டமாக இருக்கும் பேருந்துகளில் பணம் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் முத்துமாரியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |