Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நடந்து சென்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கடையில் திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தாதாபுரம் கூட்டு ரோடு சந்திப்பில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அருண்குமார் தனது நண்பரான மோகன்ராஜுடன் இணைந்து வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான கடையில் 60 ஆயிரம் ரூபாயை திருடியதை காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதன்பின் அருண்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோகன்ராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |