Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“திருட்டினால் நடந்த தகராறு” சுற்றி வளைத்த காவல்துறையினர்… கோவையில் பரபரப்பு…!!

டாக்டர் வீட்டில் திருடி சென்ற 48 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் டாலர் போன்றவற்றை காவல் துறையினர் மீட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உப்பிலிபாளையம் பகுதியில் பழனியப்பன் என்ற டாக்டர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 48 போன் தங்க நகை, 30 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் போன்றவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அறிந்த பழனியப்பன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து டாக்டரின் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தங்க நகைகளை சரிபார்த்த புகழேந்தி என்பவருக்கும், அவரது கூட்டாளிகளான தமிழரசன், ஜோதி என்பவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த புகழேந்தி தமிழரசனையும், ஜோதியையும் கத்தியால் குத்தி விட்டார். இதற்கிடையில் அங்கு விரைந்து சென்ற சூலூர் காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்த போது 3 பேரும் பழனியப்பன் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் திருடு போன வெள்ளி பொருட்கள், அமெரிக்க டாலர் மற்றும் 48 பவுன் தங்க நகைகளை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்து விட்டனர்.

Categories

Tech |