அதிமுக தொண்டர்களிடையே பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நம்முடைய இயக்கத்தில் இருந்து இன்றைக்கு பல்வேறு சுகத்தை அனுபவித்து, பதவி பெற்றவர், பதவி வெறியின் காரணமாக பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த கட்சிக்கும், தொண்டர்களுக்கும் கொடுக்கப்பட்ட அந்த தலைமை கழகம்… இன்றைக்கு நாம் கோவிலாக வணங்கிக் கொண்டிருக்கிறோம். எனக்கோ, மேடையில் இருக்கிறவர்களுக்கோ, ஓபிஎஸ்சுக்கோ சொந்தமல்ல. உங்களுடைய சொத்து, தொண்டர்களின் சொத்து.
பதவி இருந்தா அந்த அலுவலகத்தில் போய் அமர்ந்து பணி செய்யலாம். அதுதான் எங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்பு.உங்களை போல அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் இன்றைக்கு கோயிலாக பார்த்துக் கொண்டிருக்கிற அந்த கட்டிடத்தை, ஈரம் நெஞ்சம் இல்லாத அரக்க குணம் படைத்தவர்கள் தனது கைகளால், கால்களால் உடைத்து அந்த கட்டிடத்திற்குள் நுழைகின்றார்கள்.
அத்துமீறி நுழைந்து, அங்கு இருந்த பொருள் எல்லாம் தூக்கிக் கொண்டு போய்கின்றவர் ஒரு தலைவரா ? தலைவரா ? திருட்டுத்தனமாக… அங்கே இருக்கின்ற கட்சி கட்டடத்தின் பத்திரங்கள் அதையெல்லாம் இன்றைக்கு திருடி கொண்டு செல்கின்றவர் யார் ? யார் வந்தா ? யார் உடைச்சா ? யார் அந்த பொருளை கொண்டு போனார் என்று, எல்லோருக்கும் தெரியுமா ? தெரியாதா ? ஆனா இங்க இந்த நாட்டை ஆளுகின்ற ஸ்டாலினுக்கு தெரியவில்லை. அப்படிப்பட்ட முதலமைச்சர் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார்.