Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தூங்கி கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்கசிவு காரணத்தினால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதியில் குலோத்துங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குலோத்துங்கன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணத்தினால் சோபா தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது.

இதில் படுகாயம் அடைந்த குலோத்துங்கனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குலோத்துங்கன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |