கலெக்டர் அலுவலகத்தில் வைத்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி தீண்டாமை உறுதிமொழியை வாசித்துள்ளார்.
இதில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், துணை ஆட்சியர்கள் சேகர், இளவரசி சத்ய பிரசாத் மற்றும் மணிமேகலை, தாசில்தார்கள் விஜயகுமார் மற்றும் பாபு உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.