தீராத வயிற்று வழியால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மெயின் ரோடு பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். அதன்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அரவிந்தன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டாக வயிற்று மற்றும் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த அரவிந்தன் வலி தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.