4-வது கட்டமாக நடைபெற்று கொண்டிருக்கும் தடுப்பூசி முகாமை கலெக்டர் சைக்கிளில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதால் அதை கலெக்டர் சைக்கிளில் சென்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அப்போது தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் விபரங்களை சேகரித்து வரும் வாரங்களில் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ளப்பட்ட மாவட்டமாக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து பனப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்றுக்கொண்டிருந்த தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.
அதில் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிய பேரூராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு பெயர் பட்டியல் தயார் செய்துள்ளனர். அதன்பின் மொபைல் ஆப் மூலமாக ஒவ்வொருவரின் தொலைபேசி எண்ணையும் பதிவு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுள்ளாரா என்பதை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். மேலும் பனப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்ற முகாமில் இரண்டாவது தவணையாக 130 நபர்களும், முதல் தவணையாக 185 நபர்களும் என மொத்தமாக 255 நபர்களும் மற்றும் நெமிலி பேரூராட்சியில் நடைபெற்ற முகாமில் இரண்டாவது தவணையாக 117 நபர்களுக்கும், முதல் தவணையாக 159 நபர்களுக்கும் மொத்தமாக 276 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.