சாலையில் இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி 13 பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தை நோக்கி பெரியபட்டியல் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் வந்துள்ளது. இதை அமரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதேபோல் 30-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சிதம்பரம் நோக்கி வந்துள்ளது. இந்நிலையில் ஐந்து கண் மதகு பகுதியின் அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது தீயணைப்பு வாகனம் மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் 2 வாகனத்தின் முன்பக்கமும் சேதமடைந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அருகிலிருந்த பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பேருந்தில் பயணம் செய்த 13 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் இரண்டு வாகனங்களும் நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் கிரைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு இரண்டு வாகனங்களையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.