ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் இனப்பெருக்கத்திற்காக ஆர்டிக் கடல் பகுதிக்கு வந்த அரியவகை இனமான நார்வால் எனப்படும் திமிங்கலத்தை கண்டறிந்துள்ளார்கள்.
ரஷ்ய நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் ஆர்டிக் கடல் பகுதியில் அழிந்து வரும் அரியவகை இனமான நார்வால் எனப்படும் திமிங்கலங்களை கண்டறிந்துள்ளார்கள். இந்த நார்வால் திமிங்கிலங்களுக்கு தந்தம் போன்ற கூர்மையான மூக்கு பகுதி காணப்படுகிறது.
இந்நிலையில இந்த நார்வால் திமிங்கலங்கள் இனப்பெருக்கத்திற்காக ரஷ்யாவின் ஆர்டிக் கடல் பகுதிக்கு தற்காலிகமாக வந்திருப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த திமிங்கலங்கள் தந்தத்திற்காகவும் இறைச்சிக்காகவும் வேட்டையாடப்படிக்கிறது. எனவே இவைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.