Categories
பல்சுவை

திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது – சுட்டிக்காட்டிய ஸ்டாலின் …!!

பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சமபங்கு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெண்களுக்கு பூர்வீக சொத்து உரிமையும் சமபங்கு வழங்க வேண்டுமென டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், 2005 இந்து சொத்துரிமை திருத்த சட்டத்தின் கீழ், ஆண் பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண் பிள்ளைகளுக்கும் பூர்வீக சொத்தில் சமபங்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெற்றுக்கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உள்ளது என்ற சட்டத்தை 1989 ஆம் ஆண்டே முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்தார். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி. உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்க கூடிய தீர்ப்பு இது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |