Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட மார்க்கெட்…. அலைமோதிய கூட்டம்…. ஆர்வமுடன் வாங்கிய மக்கள்….!!..

மார்க்கெட் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளனர். ஆனால் கொரோனா ஊடரங்கு காரணமாக பல நாட்களாக பூ மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. தற்போது ஊடரங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தினசரி பூ மார்க்கெட்டுகள் செயல்பட தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் பூக்கள் வாங்கியுள்ளனர். இதனையடுத்து பூ மார்க்கெட்டில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் குண்டுமல்லி கிலோ 400 ரூபாய்க்கும், முல்லை கிலோ 240 ரூபாய்க்கும், அரளி கிலோ 40 ரூபாய்க்கும்
விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |