பிரபல விஞ்ஞானி ஒருவர் இருந்தார். பல வேலை செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் பெரிய திறமைசாலி .அவருடைய வீட்டில் வரவேற்பில் இருந்து சமையல் வரை எல்லாத்துக்கும் ரோபோ தான். இப்படி அவர் பல ரோபோக்கள் செய்திருந்தாலும் அவருடைய மனதில் ஒரு கவலை இருந்தது .வீட்டிற்கு வரவேற்பதில் இருந்து சமையல் வரை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ரோபோ உள்ளது .எல்லா வேலையும் செய்யும் ஒரு ரோபோ கண்டுபிடிக்க அவருக்கு ஆசை .அதற்காக நெடுநாள் உழைத்து ,பொறுமையாக ,கஷ்டப்பட்டு ,கடைசியாக ஒரு ரோபோ உருவாக்கினார்.
அவர் சொல்லும் எல்லா வேலையும் ஒரு ரோபோவே செய்தது அந்த விஞ்ஞானி ரொம்ப சந்தோசப்பட்டார். ஒருநாள் கோபத்தில் “இது எனக்கு பிடிக்கவில்லை. அடித்து நொறுக்கு “என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
அந்த ரோபோ உடனே அவர் வீட்டிற்கு வருவதற்கு முன் வீட்டையே அடித்து நொறுக்கி தூள்தூளாக ஆக்கிவிட்டது. அதன்பின் விஞ்ஞானி தான் ஏதோ நினைவில் சொல்லிவிட்டோம். நாம் சொன்னதை அது செய்துவிட்டது. என்று கவலையில் ஆழ்ந்தார் .ரோபோவுக்கு எது நல்லது ,எது கெட்டது என தெரியாது .நாம் என்ன சொன்னாலும் செய்யும் .நமக்கு எவ்வளவோ காரியங்கள் நடக்கிறது எது நல்லது ,எது கெட்டது என நமக்கே தெரியும்.
ஒருவர் உங்களிடம் கேட்டாலும் நல்லது மட்டும்தான் பண்ணியா ?என்றால் நாம் கூ றும் வார்த்தை இல்ல சில தவறுகளும் செய்தேன் என்று இப்படி சொல்லி விட்டாள் நாமும் இந்த ரோபோவுக்கு சமம்தான் .அதனால் நல்லதை மட்டும் செய்து பார்க்க வேண்டும் .நம்மளை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோபத்தில் சிந்தனைகளை சிதறவிட்டு தவறிழைத்து வறுத்தபடுவதில் எந்த பயனும் இல்லை ஆகவே நல்லதை சிந்தித்து நன்மையை பெறுவோம் ..