துலாம் ராசி அன்பர்களே….!! இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவையும் கொடுக்கலாம். சொந்த பணியை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும்.இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் , எதிர்ப்புகள் அகலும் , பணவரவு கூடும். பிள்ளைகளுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும் , உத்தியோகத்தில் கூடுதல் கவனம் இருப்பது நல்லது.
ஒருமுறைக்கு இருமுறை தொழில் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன் யோசித்து செய்யுங்கள் அது போதும்.இன்று கணவன் , மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் , மகிழ்ச்சியும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு உகந்த நிறமாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள்