தமிழ் சினிமாவில் கைது திரைப்படம் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. அதன் பிறகு கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. இதனை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்து உள்ளார். ஆனால் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலஹாசனுடடன் தீவாளி பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை இயக்குனர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அத்துடன் “தீபாவளி எப்படி போச்சு என கேட்டா இந்த போட்டோவை காமிச்சான். எப்பொழுதும் தூண்டுதல் அளிக்கக்கூடிய பயணம்” என ரத்தினகுமார் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.