Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீப்பெட்டிகள் வைக்‍கப்பட்ட குடோனில் தீ விபத்து ….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தீப்பெட்டி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சேதமடைந்தன.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அய்யம்பட்டியில் மாரிச்சாமி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தயார் செய்யும் ஆலையில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் சடையம்பட்டியில் உள்ள கிடங்கில் சேமித்து வைக்கப்படுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் வாகனங்கள் இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு அந்த கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |