நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்த திப்பிலியின் மற்ற மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு
- ஆஸ்துமாவால் அவதிப்படும் குழந்தைகளுக்கு திப்பிலியை தேனில் கலந்து கொடுத்து வந்தால் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும்.
- திப்பிலியை நன்றாக வறுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி இருமல் போன்றவை தீரும்.
- 100 மில்லி பாலில் 2 கிராம் அளவு திப்பிலியை கலந்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் தேமல் பிரச்சனை மற்றும் மூட்டு வலி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
- பாலில் திப்பிலி பொடியை போட்டு நன்றாக காய்ச்சி குடித்து வருவதால் இருமல் பிரச்சனை தீரும்.
- கடுக்காய் பொடி மற்றும் திப்பிலி பொடியை சம அளவு எடுத்து தேனில் சேர்த்து நன்றாக கலந்து தினமும் இரண்டு வேளை அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் சரியாகும்.
- திப்பிலியை மருந்தாக பயன்படுத்தி வர மார்புச்சளி, இருமல், சுவாசக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சினைகள் தீரும்.