திரையரங்குகளில் 50 ரூபாய் டிக்கெட் வழங்க வேண்டும் என்றும் உள்ளாட்சி வரியை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் டி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளில் ஏ, பி, சி என மூன்றாகப் பிரித்து குறைந்த விலை டிக்கெட் வழங்கப்படவேண்டும் என நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். பாமரர்களும் திரையரங்கிற்கு வந்து திரைப்படங்களை பார்க்கும் வகையில் 8 சதவீதமாக இருக்கும் உள்ளாட்சி வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.