இயக்குனர் பாரதிராஜா மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
திரைப்படத் தயாரிப்பாளர்களை நோஞ்சான் என்று கூறி அவமதித்த இயக்குனர் பாரதிராஜா மன்னிப்பு கேட்காவிடில் அவர் வீட்டின் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் ஓ.டி.டி வில் படங்கள் வெளியிடுவது தயாரிப்பாளர்கள் முடிவு என்றும் மேலும் கூறினார்.