Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலை வாய்ப்பு பயிற்சி…. தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்…. கலெக்டரின் தகவல்….!!

வேலை வாய்ப்புடன் இணைந்த திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பதற்காக தகுதி இருக்கின்ற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் நகர்ப்புற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு மற்றும் பணியமர்த்தும் திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தில் விவசாயி சார்ந்த தொழில் திறன் பயிற்சி, ஆடை தயாரிப்பு மற்றும் கட்டுமானம் குழாய் பொருத்துனர் போன்ற பயிற்சிகள் உரிய நிறுவனங்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து இதற்கு விண்ணப்பிக்கும் திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள் தேசிய திறன் வளர்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இதில் அரசின் மூலமாக வழங்கப்படுகின்ற திறன் வளர்ப்பு பயிற்சிகள், ஊதியத்துடன் வேலை வாய்ப்பு பயிற்சி, முடித்தமைக்கான முன் அனுபவம் குறித்து ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் பிரதமர் கவுன்சில் என்ற பயிற்சி மையங்களை கொண்ட திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தகுதியான திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள் தங்களது கருத்துக்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட அலுவலகம், நிறைமதி ஊராட்சி மன்ற வளாகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் வருகிற 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |