Categories
சினிமா தமிழ் சினிமா

திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குக- இயக்குநர் பாரதிராஜா

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்ததை போன்று திரைப்பட படப்பிடிப்புக்களுக்கும்  அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு இயக்குனர் திரு. பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் திரு. பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் திரையரங்கை மூடியும், படப்பிடிப்புகளை நிறுத்தியும், 150 நாட்கள் ஆகின்றன என்கிற வேதனையை தமிழ் சினிமா முதன்முறையாக இப்போது சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 80- க்கும் மேற்பட்ட படங்களும் படப்பிடிப்புகளும் தேங்கி நிற்பதால் சின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு அனுமதி அளித்ததை போல, திரைப்பட படப்பிடிப்புகளுக்கும் ஸ்டூடியோ அல்லது வீடுகளுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |