Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தீராத கடன் தொல்லை…. தம்பதியினரின் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

கடன் தொல்லையால் கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அச்சல்வாடி பகுதியில் திருநாவுக்கரசு-பழனியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இதில் மகளுக்கு திருமணமாகி கணவர் குடும்பத்தினருடன் தனியாக வசித்து வருகின்றார். இதனையடுத்து திருநாவுக்கரசுக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

அப்போது அவ்வழியாக சென்றவர்கள் கணவன்-மனைவி 2 பேரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணவன்-மனைவி 2 பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |