நுரையிரல் நோயால் அவதிப்பட்ட விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள லாலாப்பேட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அதன்பின் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.