விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மட்டையான்திடலில் கூலித்தொழிலாளி தினேஷ் வசித்து வந்தார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் சிரமப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தினேஷ் திடீரென வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார்.
அப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.