Categories
சினிமா தமிழ் சினிமா

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தடையா?… மத்திய அரசின் கடித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது .

கொரோனா பரவல் காரணமாக தமிழக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் திரையரங்குகள்  100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரால் கடும் எதிர்ப்பு கிளம்பியது . இந்நிலையில் தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ‘திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதித்திருப்பது விதிமீறல். திரையரங்குகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப்பெற வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வழிமுறைகளை கடைப்பிடித்து புதிய உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது ‌. வருகிற ஜனவரி 13-ஆம் தேதி ‘மாஸ்டர்’ படம் வெளியாக உள்ள நிலையில் இந்த கடிதத்தால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் .

Categories

Tech |