Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மூன்றாவதும் பெண் குழந்தை”… தலையணையால் அமுக்கி…. பிறந்து 7 நாட்களான குழந்தைக்கு நேர்ந்த குடும்பம் …!!

உசிலம்பட்டி அருகே பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கே. பாறைப்பட்டியைச்  சேர்ந்த சின்னசாமி-சிவப்பிரியா என்பவர்களுக்கு  கடந்த வாரம் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. பிறந்த பெண் குழந்தையை அவரது பாட்டி நாகம்மாள் கொன்றதாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சுத் திணற கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெண் சிசு கொலை சம்பவத்தில் சிசுவின் பெற்றோர் சின்னசாமி மற்றும் சிவப்பிரியாவை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |