காசி மீதான மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் சிபிசிஐடி போலீசார் இன்று தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள். இளம் பெண் மற்றும் திருமணமான பெண்களை காதலிப்பது போல் நடித்து அவர்களுடன் தனியறையில் உல்லாசம் அனுபவித்து வந்த காசி என்ற இளைஞர் மீது புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கந்துவட்டி தொடர்பாக ஒரு இளைஞர் அளித்த புகார் மற்றும் இதுவரை காசியில் பாதிக்கப்பட்ட 6 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்தல் போன்ற வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார் மூன்றாவது குற்றப்பத்திரிகையை நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஏற்கனவே இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் தனியார் நிறுவன ஊழியரை காதலிப்பது போல ஏமாற்றி ஆபாசம் எடுத்த வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிக்கையும் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.